காதலனை கொன்று உடலை பிரியாணி சமைத்த பெண்! ஏன் தெரியுமா?

பெண் ஒருவர் தனது முன்னாள் காதலரை கொலை செய்து அவரின் உடலை சமைத்து கட்டுமானப் பணி செய்யும் ஆட்களுக்கு கொடுத்துள்ள சம்பவம் அபுதாபியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொராக்கோவை சேர்ந்த 30 வயது பெண் அபுதாபியில் வசித்து வருகிறார். அவர் 20களில் இருக்கும் நபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். அந்த நபருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு ஏற்படவே இவரை பிரிந்துவிட்டார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த பெண் அவரை கொலை செய்து அவரது உடலை பிரியாணி சமைத்து கட்டுமானப் பணி செய்து வரும் பாகிஸ்தானியர்களுக்கு விருந்தாக கொடுத்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்து சில மாதங்கள் ஆகிவிட்டது. ஆனால் இது குறித்து தற்போது தான் தெரியவந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட நபரை தேடிக் கொண்டு அந்த நபரின் சகோதரர் மொராக்கோ பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளார். சமையல் அறையில் இருந்த பாத்திரம் ஒன்றில் மனித பல் இருப்பதை பார்த்து சந்தேகம் ஏற்பட்டு அவர் பொலிசில் புகார் செய்துள்ளார்.

பொலிஸ் விசாரணையில், தனது முன்னாள் காதலரை பழி வாங்க அவரை கொலை செய்ததை அந்த பெண் ஒப்புக் கொண்டார். அந்த பெண்ணும், கொலை செய்யப்பட்ட நபரும் 7 ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் தான் அந்த நபர் மொராக்கோவை சேர்ந்த வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ய திட்டமிட்டார் என்று பொலிசார் குறிப்பிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]