படையினரின்வசமுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான மேலும் சில காணிகளை விடுவிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தை

யாழ் மவாட்டத்தில் படையினரின்வசமுள்ள பொதுமக்களுக்கு சொந்தமான மேலும் சில காணிகளை விடுவிப்பது தொடர்பில் சாதகமான பதிலை தாம் விரைவில் வழங்குவதாக இராணுவத்தளபதி லெப்ரினன் ஜெனரால் மகேஸ் சேனாநாயக்க யாழ் மாவட்ட அரச அதிபரிடம் உறுதியளித்தார்.

யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ள இராணுவத்தளபதி லெப்ரினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடினார் .

யாழ் மாவட்டத்தில் படையினரின் வசமுள்ள காணிகள் தொடர்ச்சியாக விடுவிக்கப்பட்டுவருகின்றமை தொடர்பில் அரசாங்க அதிபர் இதன்போது இராணுணவத்தளபதிக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும் பல காணிகள் மற்றும் படையினரின் கட்டுப்பாட்டிலுள்ள பாடசாலைகள் வைத்தியசாலைக்ககட்டிடங்கள் போன்றவற்றையும் விரைவில் விடுவித்து மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துமாறும் அரச அதிபர் கோரிக்கை விடுத்தார்

இவ்விடயம் தொடரிப்ல தாம் சாதகமான பதில் ஒன்றை விரைவில் வழங்குவதாக இராணுவத்தளபதி தெரிவித்ததாக யாழ் மாவட்ட அரச அதிபர் நாகலிங்கம் வெதநாயகன் ஊடக்களுக்கு தெரிவித்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]