காணாமல் போன மூன்று பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்பு

பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொட்டியாகலைத் தோட்டத்தில் கடந்த 8ஆம் திகதி காணாமல் போன மூன்று பிள்ளைகளின் தந்தையொருவர் நேற்று கொட்டியாகலை தொழிற்சாலைக்கு அருகாமையிலுள்ள காட்டுப்பகுதியில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சடலம் உருக்குலைந்த நிலையிலேயே மீட்கப்பபட்டுள்ளது. மீட்கப்பட்ட சடலம் முனியாண்டி சங்கர் வயது 44 என அடையாளம் காணப்பட்டுள்ளது.

மேற்படி நபர் கடந்த 8ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இவரது புகைப்படத்துடன் காணவில்லையென துண்டுப்பிரசுரங்களும் ஒட்டப்பட்டுள்ளன. ஒரு மாணவன் விளையாடிக்கொண்டிருக்கும் போது நாய் குரைப்பதை பார்த்து சடலத்தை கண்டு அறிவித்ததையடுத்தே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இது கொலையா தற்கொலையா என பலகோணங்களில் பொகவந்தலாவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]