காணாமல் போன மீனவர்கள் ஈரானில் மீட்பு

         காணாமல் போன மீனவர்கள் ஈரானில் மீட்பு

சீரற்ற காலநிலை காரணமாக காணாமல் போன ஐந்து இலங்கை மீனவர்கள், ஈரானில் பாதுகாப்பாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த மீனவர்களை விமானத்தின் மூலம் நாட்டுக்கு அழைத்துவரத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த 29ஆம் திகதி பிற்பகல் முதல் சில நாட்கள் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, ஐவர் காணாமல் போயுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்திருந்தது.

இந்தநிலையில், குறித்த மீனவர்கள் ஈரானில் உள்ளமை தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]