காணாமல் போன உறவுகளுக்காக வடக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிப்பு

காணாமல் போனோர் உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வடக்கில் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.

வடமாகாணத்தைச் சார்ந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட நிலையில், யாழ்.மாவட்டத்தில் உள்ள வர்த்தக நிலையங்கள், போக்குவரத்துத்துறை பாடசாலைகள், உள்ளிட்ட பல துறையினர் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, ளையும் மூடி, பாடசாலைகளையும் மூடி ஆதரவர்த்தக நிலையங்கவு தெரிவித்துள்ளனர்.

காணாமல் காணாமல் காணாமல் காணாமல்

இதேநேரம், யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் பூரண ஆதரவு அளிக்கும் நிலையில், யாழ்ப்பல்கலைக்கழக வாயில் இழுத்து மூடப்பட்டுள்ளன.

யாழ்.மாவட்டத்தில் இருந்து வெளி வெளிமாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் சேவையில் ஈடுபடவில்லை. இம்முறை அனைத்து தரப்பினரும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பேராட்டத்திற்கு பூரண ஆதரவு அளித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]