காணாமல் போனோர் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் – ஜனாதிபதி உறுதி

விடுதலைப் புலிகளுக்கும், இராணுவத்துக்கும் இடையே இறுதிகட்ட போரின்போதுது ஆயிரக்கணக்கான தமிழர்கள் திடீரென மாயமாகினர்.

அவர்களில் பெயர் பட்டியலையும், நிலைமை குறித்தும் அரசு அறிவிக்க வேண்டும் என காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் தொடர்நந்தும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து காணாமல் போனோரின் உறவினர்கள் கடந்த 114 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இறுதிகட்ட போரின் போது காணாமல் போனோரின் பெயர் விவரங்களை வெளியிட வேண்டும். மறைமுகமான தடுப்பு முகாம்கள் மற்றும் சிறைச்சாலைகளுக்கு சென்று பார்வையிட வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகள் உள்பட தமிழர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பன போன்ற 3 கோரிக்கைகளை முன் வைத்து இப்போராட்டம் நடந்து வருகிறது.

இந்த நிலையில், வட மாகாணம் யாழில் நகருக்கு சென்ற அதிபர் மைத்திரிய பால சிறிசேனா காணாமல் போனோரின் உறவினர்களையும், சிலில் சமூக பிரதிநிதிகளையும் கவர்னர் மாளிகையில் சந்தித்து கலந்துரையாடினார்.

அப்போது இறுதி கட்ட போரின் போது காணாமல் போனோரின் பெயர் விவரங்களை விரைவில் வெளியிடுவேன். நாளை (இன்று) தேசிய பாதுகாப்பு சபை கூட்டம் நடக்கிறது. அப்போது நடைபெறும் கலந்துரையாடலில் காணாமல் போனோரின் பெயர் விவரங்களை வெளியிட முப்படைகளுக்கும் கட்டளையிடுவேன் என உறுதி அளித்தார்.

இதற்கிடையே, தங்களது கோரிக்கைகள் நிறைவேறாவிட்டால் தொடர்ந்து போராட்டம் நடைபெறும் என காணாமல் போனோரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.