காணாமல் போனோர் தொடர்பில் வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்

காணாமல் போனோர்கள் மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான தீர்வினை அரசாங்கம் மிக விரைவில் வழங்க வேண்டுமென வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

வடமாகாண சபையின் 130வது அமர்வு இன்று (30) கைதடியில் உள்ள பேரவைச் செயலகத்தில் பேரவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது.

சபை அமர்வின் ஆரம்பத்தில், ஆகஸ்ட் 30 ஆம் திகதி சர்வதேச காணாமல் போனோர் தினமாகையால், சர்வதேச காணாமல் போனோர் தினம், சர்வதேச காணாமல் போனோர் விழிப்புணர்ச்சியும் கருத்துக்களும் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

நேற்று முன்தினம் நடைபெற்ற சபை நடவடிக்கை குழுவிடம், காணாமல் போனோhகள் தொடர்பான விடயம் பரிசீலிக்கப்பட்டு, இந்த அவையானது, இந்த நாட்டில் தமிழ் மக்கள் காணாமல் போனதும், காணாமல் ஆக்கப்பட்ட துன்பியல் நிகழ்வினை சுமந்துகொண்டு போராடிக்கொண்டிருக்கின்ற அத்தனை மக்கள் சார்பிலும் அந்த மக்களோடு அவை இணைந்து கொள்கின்றது.

எனவே, இந்த அரசாங்கம் காணாமல் போனோர் விடயத்தில் கூடுதல் கவனமெடுத்து காணாமல் போனோரின் உறவுகளுக்கு தீர்வினை வழங்கும் செயற்பாட்டினை மிக விரைவில் முன்னெடுக்க வேண்டுமென்று வடமாகாண சபை வலியுறுத்துகின்றதென முன்மொழிவினை வடமாகாண சபை சார்ந்து, அவையின் பேரவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் முன்மொழிந்தார்.

எந்தவித விவாதங்களும் எதிர்ப்புக்களுமின்றி பிரேரணையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று சபையில் அவைத்தலைவர் வேண்டுகோள்விடுத்தார். அந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட உறுப்பினர்கள் அங்கிகாரம் வழங்கியதன் அடிப்படையல் சபையில் பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]