காணாமல் போனோர் அலுவலக தலைவரை நியமித்தது அரசிலமைப்பு சபை?

காணாமல் போனோர் அலுவலகத்தின் தலைவரை நியமித்தல் தொடர்பில் அரசிலமைப்பு சபையின் ஊடாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசியலமைப்பு சபையின் தலைவராக சபாநாயகர் கரு ஜயசூரிய, பிரதமர் ரணில் விக்கரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன், சம்பிக்க ரணவக்க, விஜித ஹேரத் உள்ளிட்டவர்கள் அதில் அங்கம் வகிக்கின்றனர்.

முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ முன்னதாக அதில் அங்கம் வகித்த நிலையில் பின்னர் அதிலிருந்து விலகியிருந்தார்.

குறித்த சபையின் ஊடாக யோசனை செய்யப்பட்ட பின்னர் ஜனாதிபதியின் கையொப்பம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இரண்டு வாரங்களுக்குள் அது வர்த்தமானியில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]