காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் அதுல் கெஷாப் கருத்து

காணாமல் போனோர்

காணாமல் போனோர் அலுவலகத்துக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை முக்கியமானதொரு நகர்வு என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கெஷாப் தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் அலுவலகத்துக்கான தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமனக் கடிதங்களை நேற்று வழங்கியிருந்தார்.

இதுதொடர்பாக அமெரிக்கத் தூதுவர் அதுல் கெஷாப், தமது டுவிட்டர் தளத்தில் கருத்து பதிவு செய்துள்ளார்.

“வலிமையான, சுதந்திரமான, காணாமற்போனோருக்கான அலுவலகத்தின் உருவாக்கமானது, இலங்கையின் அனைத்து மக்களுக்கும், அதிலும், தமது உறவினர்கள் தொடர்பான பதிலைத் தேடுகின்ற மக்களுக்கு ஒரு முக்கியமான நகர்வாகும்” என்று பதிவிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]