காணாமல் போனோர் அலுவலகம் சுயாதீனமாகவே செயற்படுகின்றது.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் சுயாதீனமாக செயற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்துக்கு எந்தவித அரசியல் தொடர்பும் இல்லை என்றும், இது சுயாதீனமாக செயற்படுவதாக அலுவலகத்தின் தலைவரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் நேற்று இடம்பெற்ற காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் இரண்டாவது அமர்வில் அவர் இதனைக் கூறியுள்ளார்.

காணாமல் போனோர் தொடர்பான அலுவலகங்கள் பிரதேச மட்டத்தில் இவ்வருடத்தில் அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன், 1971ஆம் ஆண்டில் இருந்து காணாமல் போன நபர்கள் குறித்த சரியான தகவல்களும் அவர்கள் கடத்தப்பட்ட இடங்கள் தொடர்பாக தகவல்களும் இதன்போது பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதன்காரணமாக, காணாமல் போனோரின் குடும்பங்கள் இது தொடர்பான தகவல்களை வழங்க வேண்டுமென்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதேவேளை, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் முதலாவது அமர்வு, மன்னாரில் கடந்த 12ஆம் திகதி இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]