காணாமல் போனோர் அலுவலகத்தின் உறுப்பினர்கள் நியமனத்துக்கு ஜனாதிபதி அனுமதி

காணாமல் போனோர் அலுவலகத்தின் ஏழு உறுப்பினர்களை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அனுமதி அளித்துள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ், காணாமல் போனோர் பணியகத்தின் தலைவராகச் செயற்படுவார் என்றும், ஏனைய ஆறு உறுப்பினர்களும் அவருடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் நடந்த கூட்டத்தில் அவர் இதனை நேற்று தெரிவித்துள்ளார்.

காணாமல் போனோர் பணியகத்தின் ஏனைய உறுப்பினர்களாக, ஜெயதீபா புண்ணியமூர்த்தி, கலாநிதி ஸ்ரீயானி நிமல்கா பெர்னான்டோ, மேஜர் ஜெனரல் மொஹந்தி அன்ரோனெட் பீரிஸ், சுமணசிறி லியனகே, மிராக் ரகீம், கணபதிப்பிள்ளை வேந்தன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

“உறுப்பினர்கள் அனைவரும் அடுத்தவாரம் சந்தித்து, எவ்வாறு அலுவலகத்தை ஒழுங்கமைப்பது என்பது, எதிர்கால நடவடிக்கைகள் என்ன என்பது தொடர்பாக ஆராயவுள்ளனர்.” குறித்த அலுவலகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார்.