முகப்பு News Local News காணாமல் போனோர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை

காணாமல் போனோர்கள் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை

காணாமல் போனோர்கள் வெளிநாடுகளில் இருப்பதாக தற்போதுவரை தமக்கு எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை என காணாமல் போனோர் தொடர்பான பணியகம் தெரிவித்துள்ளது.

இறுதி யுத்தத்தில் காணாமல் போனவர்களின் பெயர் பட்டியலில் உள்ள பலர் வெளிநாடுகளில் மாற்றுப் பெயர்களில் உள்ளனர் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்திருந்தார்.

எனவே, சர்வதேச நாடுகளில் உள்ள இலங்கையர்கள் தங்களது பெயர் விபரங்களை வெளியிடவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், காணாமல் போனோர் தொடர்பான பணியகத்தின் விசாரணைகளில் இது குறித்த தகவல் எதுவும் கிடைக்கப்பெற்றுள்ளதா என பணியகத்தின் தலைவரான ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரிஸிடம் எமது செய்திச் சேவை வினவியது.

இதன்போது பதிலளித்த அவர், காணாமல் போனோர்கள் வெளிநாடுகளில் இருப்பதாக தமக்கு இதுவரை எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லை எனக் குறிப்பிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com