காணாமல் போனோருக்கான அலுவலகத்தின் முதல் சந்திப்பு மன்னாரில்

காணாமல் போனோருக்கான அலுவலகம் இன்று மன்னாரில் தமது முதலாவது சந்திப்பை நடத்தவுள்ளது.

காணாமல் போன மற்றும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பத்தினர், செயற்பாட்டாளர்கள், தொழில்முறையாளர்கள் மற்றும் இந்த விடயங்களில் செயற்படும் நிறுவனங்களுடன் இதன்போது கலந்துரையாடல்கள் நடத்தப்படவுள்ளன.

இதையடுத்துவரும் வாரங்களில் திருகோணமலை, முல்லைத்தீவு, கண்டி, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மாத்தறை மற்றும் அம்பாறை ஆகிய இடங்களில் காணாமல் போனோருக்கான அலுவலகம் சந்திப்புக்களை நடத்தவுள்ளது.

பல ஆண்டு காலமாக உறவினர்களை தேடுகின்ற குடும்பத்தினர் மற்றும் தனிநபர்களின் அவசரப்போக்கையும், விரக்தியையும் காணாமல் போனோருக்கான அலுவலகம் புரிந்து கொண்டுள்ளதாக, அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், முக்கியமான நடைமுறைகளை உறுதிப்படுத்துவதற்காகவும், முறையான பிரதிபலிப்பொன்றை உறுதிப்படுத்துவதற்கும் அதனை செயற்படுத்துவதற்காகவும், குறிப்பிட்ட விடயத்தை மாத்திரம் கையாளும் அளவீடுகளை தவிர்ப்பதற்காகவும் பொறுமையாக இருக்குமாறு அலுவலகம் அவர்களை கோரியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]