காணாமல் போனதாக கூறப்பட்ட பெண் மலைப் பாம்பின் வயிற்றில் – அதிர்ச்சியில் உறவினர்கள்

இந்தோனிசியாவில் காணாமல் போனதாக கூறப்பட்ட பெண், மலைப் பாம்பின் வயிற்றின் உள்ளே இருந்ததால், அதைக் கண்டு உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இந்தோனிசியாவின் Sulawesi பகுதியைச் சேர்ந்த 54 வயது மதிக்கத்தக்க Wa Tiba என்ற பெண் கடந்த வியாழக்கிழமை வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய தோட்டத்திற்கு சென்றுள்ளார்.

மறுநாள் காலை ஆகியும் அந்த பெண் வராத காரணத்தினால் உறவினர்கள் உட்பட பலரும் அங்கிருக்கும் முட்புதர்கள் உட்பட பல இடங்களில் தேடியுள்ளனர்.

ஆனால் காணவில்லை. இதனால் உறவினர்கள் பலரும் அந்த பெண்ணிற்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என்று அழுதுள்ளனர்.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று காலை 9 மணியளவில் சுமார் 27 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று நகர முடியாமல் ஒரே இடத்தில் நின்றுள்ளது.

இதனால் சந்தேகமடைந்த அக்கிராமமக்கள் அதை அடித்து கொன்றுவிட்டு உடலை அறுத்துள்ளனர். அப்போது அவர்கள் சந்தேகித்த படியே காணமல் போனதாக கூறப்பட்ட Wa Tiba உள்ளே இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதைக் கண்ட கிராமமக்கள் அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இறந்த பெண்ணிற்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]