காணாமல்போனோர் விடயத்தில் இலங்கை அரசாங்கம் விரைவாக செயற்பட வேண்டும்

காணாமல்போனோர் விடயத்தில் இலங்கை அரசாங்கம் விரைவாக செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் என பிரித்தானியாவின் நாடாளுமன்று உறுப்பினர்கள் குழுவொன்று வலியுறுத்தியுள்ளது.தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்றக் குழுவின் போல் ஸ்கலி இதனை வலியுறுத்தியுள்ளார்.

காணாமல்போனோரின் உறுவினர்கள் கடந்த 300 நாட்களுக்கு மேலாக போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

ஆனால், அவர்களிடத்தில் அரசாங்கம் வழங்கிய உறுதிமொழி இன்னும் நிறைவேற்றப்பட வில்லை.

தமிழ் மக்களும் இலங்கையர்களே என்ற சிந்தனையுடன் அரசாங்கம் அவர்களது விடத்தில் ஆழ்ந்த அவதானத்தை செலுத்த வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.