காணாமல்போனோர் சட்டமூலம் 21ஆம் திகதி மீண்டும் நாடாளுமன்றத்துக்கு வருகிறது

காணாமல்போனோர் தெடார்பிலான காரியலத்தை ஸ்தாபிக்கும் சட்டமூலம் மறுசீரமைப்புத் தொடர்பிலான விவாதம் எதிர்வரும் 21 ஆம் திகதி நாடாளுமன்றில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பிலான காரியாலயத்தை ஸ்தாபிக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டு பல மாதங்கள் கடந்தும் அரசு அதனை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எதுவும் எடுத்திருக்கவில்லை. இந்தச் சட்டமூலத்தை நடைமுறைப்படுத்தும்படி பல்வேறு சர்வதேச அமைப்புகளும், சிவில் அமைப்புகளும் இலங்கை அரசுக்கு தொடர்ச்சியான அழுத்தத்தை கொடுத்த வண்ணம் இருந்தன.

இந்நிலையில் நேற்றுமுன்தினம் காணாமல்போனோர் தொடர்பிலான விபரங்களை வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு முப்படையினருக்கு ஜனாதிபதி யாழில் வைத்து பணித்திந்தார். அதன் பிரகாரம் காணாமல் போனோர் சட்டமூலத்தை மறுசீரமைப்பு செய்யவதாக கூறிவந்த அரசு, 21ஆம் திகதி இரண்டாம் வாசிப்புக்கு விடுத்து நிறைவேற்ற தீர்மானித்துள்ளது.

எதிர்வரும் 21ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவால் மேற்படி சட்டமூலம் இரண்டாம் வாசிப்புக்கு விடப்படவுள்ளதாக அரச தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]