காணாமல்போனோர் அலுவலகம் அமைப்பதை தடுக்க மஹிந்த தலைமையில் முக்கிய கூட்டம்

காணாமல்போனோர் அலுவலகத்தை அமைக்கும் சட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக நாடுபூராகவும் பிரசாரம் செய்வதற்கு எதிரணி தீர்மானித்துள்ளது.

இதுபற்றி ஆராய்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக கூட்டு எதிரணியின் நாடாளுமன்றக்குழுக் கூட்டம் இன்று முற்பகல் 11.30 மணிக்கு நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.
அனைத்து வழிகளிலும் அழுத்தங்களைப் பிரயோகித்து, காணாமல்போனோர் குறித்த அலுவலகம் அமைவதைத் தடுப்பதே கூட்டு எதிரணியின் நோக்கமாகும். இதை மையப்படுத்தியே சந்திப்பு இடம்பெறவுள்ளது.

“”ஒருவருட தாமதத்துக்குப் பின்னர் அழுத்தத்தாலேயே குறித்த சட்டத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளார். எனவே, இதுபற்றி அவர் மீள்பரீசிலனை செய்யவேண்டும்” என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியுள்ளார்.

குறித்த சட்டத்திலுள்ள குறைபாடுகளை சுட்டிக்காட்டி மகாநாயக்க தேரர்களுக்கும் மஹிந்த ராஜபக்ஷ நேற்று கடிதம் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]