காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டத்திற்கு ஆதரவாக களத்தில் குதித்த கிளிநொச்சி விஜய் நற்பணி மன்றம்

கிளிநொச்சி விஜய் நற்பணி மன்றம் கிளிநொச்சி மாவட்டத்தில் பல சமூக நற்பணி செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றது. இவ் நற்பணி மன்றத்தின் ஊடாக இலங்கையில் இறுதி போரில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு ஆதரவாக இன்று களத்தில் குதித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் ஈழப்போரில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் பெற்றோர் தமது பிள்ளைகளை மீட்டுதர வேண்டும் என 429 நாட்களாக கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் திடலில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு வழங்கும் நோக்குடன் கிளிநொச்சி விஜய் நற்பணி மன்றம் இளைஞர்களுடன் இணைந்து ஆதரவை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிளிநொச்சி விஜய் நற்பணி மன்றம்கிளிநொச்சி விஜய் நற்பணி மன்றம்