காணமற்போனோரை கண்டறிய முடியும் – ஜனாதிபதி சட்டத்தரணி
“காணாமற்போனோர் தொடர்பான தொடர்பான அலுவலகத்தின் ஊடாக எத்தகைய காலத்திலும் இடம்பெற்ற நபர்கள் காணாமல் போனமை தொடர்பான விடயங்களை கண்டறிய முடியும்” என்று, அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரீஸ் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாத்திரமன்றி நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் இடம்பெற்ற காணோமற்போனோர் தொடர்பாக இந்த அலுவலகத்தின் ஊடாக விடயங்களை கண்டறிய முடியும் என்றும் அவர் கூறினார்.
இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் , “மோதல் நிலவிய காலத்தில் மாத்திரமன்றி அதற்கு முன்னரும் பின்பும் இடம்பெற்ற காணோமற்போதல் மற்றும் எத்தகைய காணாமல் போன சம்பவங்களிற்கும் இந்த அலுவலகம் நடவடிக்கை மேற்கொள்ளும்.
இந்த அலுவலகத்தின் ஊடாக தண்டனை விதிக்கப்படமாட்டாது. கண்டறியப்படும் தகவல்கள் சிவில் வழக்கு அல்லது குற்றச்செயல் தொடர்பான வழக்குக்கு சாட்சியமாக பயன்படுத்த முடியாது” என்றார்.
அத்துடன், சர்வதேசத்தின் தேவைக்கு அமைவாக இந்த அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை அவர் நிராகரித்தார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]