காணமற்போனோரின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ந்தும் நான்காவதாக நாளாக நடைபெறுகிறது  

காணாமற்போனோரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அரசியல் கைதிகளின் உறவினர்கள் நான்காவது நாட்களாக வவுனியாவில் உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதில் ஒரு தாய் நான் உயிர் வாழ்வதே என் பிள்ளை திரும்பி வருவான் என்ற நம்பிக்கையில்தான் என கண்ணீர் மல்க தெரிவித்தார். அவர்கள் இப்போராட்டத்திற்கான முடிவு தெரியும்வரை உண்ணாவிரதப் போராட்டத்தை கைவிடப்போவதில்லை எனக் கூறினர். அரசு இவ்விஷயத்தில் தலையிட்டு அவர்களுக்கான தீர்வினை மேற்கொள்ளவேண்டும் எனவும் சுட்டிக்காட்டினர்.