காட்மோரில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த மூன்று பிள்ளைகளின் தாய் 100 அடிபள்ளத்தில் வழுக்கிவிழுந்து பலி

காட்மோரில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போது வழுக்கி விழுந்த தாய் மரணம்.

காட்மோர் தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயான 56 வயதுடைய சின்னையா தெய்வானை என்ற தாயாரே பலியானதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில் வழமை போல் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மவ்ஸாகலை நீர் தேக்கத்திற்கு நீரை ஏந்திவரும் காட்மோர் ஆற்றில் வழுக்கி விழுந்து சம்பவ இடத்திலையே பறிதாபமாக உயிரழந்துள்ளார்.

தற்போது இவரது உடல் பிரதே பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணையை முன்னேடுத்துள்ள மஸ்கெலிய காவல் துறையினர் இந்நிகழ்வு இன்று 10.10.2018 9.30 am அளவில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ளனர்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]