காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலி

காட்டு யானை

காட்டு யானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் பலி

மட்டக்களப்பு வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட பேருளாவெளி ஆத்தியடிவெட்டைப் பகுதியில் இன்று காலை வேளையில் காட்டுயானை தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார்.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான தம்பிமுத்து கந்தசாமி (வயது 55) என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

தனது வயலுக்குள் இருந்து தனது சேனைக்குடிலுக்கு சென்று கொண்டிருந்த வேளையில் காட்டுப் பகுதியில் மறைந்திருந்த காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த இடத்திற்கு மரண விசாரணை அதிகாரி சென்று மரண விசாரணை தொடர்பாக அறிக்கையிட்ட பின்னர் சடலம் வாழைச்சேனை வைத்தியாலைக்கு கொண்டு செல்லப்பட்டு வைத்திய விசாரணையின் பின்னர் சடலத்தை உறவினரிடம் கையளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை இவ்வருடத்தின் ஜனவரி மாதம் முடிவதற்குள் காட்டு யானையின் தாக்குதலில் மூன்று உயிர் சேதம் இடம்பெற்றுள்ளது.

காட்டு யானை காட்டு யானை காட்டு யானை காட்டு யானை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]