காட்டு யானைக் கூட்டம் தாக்கியதில் கடைக்காரர் பலி

காட்டு யானைக் கூட்டம் தாக்கியதில் கடைக்காரர் பலி

elepahnt attack

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலையில் வெலிக்கந்தை எனுமிடத்தில் காட்டு யானைக் கூட்டம் தாக்கியதில் ஏறாவூர் மிச்நகரைச் சேர்ந்த மஹ்ரூப் முஹம்மத் அனீஸ் (வயது 31) என்பவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் ரெதீதென்னயில் உணவு விடுதி நடாத்தி வருகின்றார்.

ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக ரெதீதென்னயிலிருந்து வெலிக்கந்தைக்குச் சென்ற போது மட்டக்களப்பு கொழும்பு நெடுஞ்சாலையில் காட்டு யானைக் கூட்டம் வழிமறித்ததில் அவைகளின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.

உடற் கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் வெலிக்கந்தை பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டுசெல்லப்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]