காட்டுயானை துரத்தியதால் அமைச்சர் ஓட்டம்

வனஜீவராசிகள் பிரதியமைச்சர் பாலித தெவரப்பெருமவை காட்டு யானை ஒன்று தாக்க முற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திம்புலாகல, நவமில்லான, இத்தபிச்சவௌ பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த காட்டு யானைக்கு சிகிச்சையளிக்க சென்ற நிலையில் குறித்த காட்டு யானை இவர்களை துரத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 100 மீற்றர் தூரம் வரை பிரதியமைச்சரையும் சிகிச்சையளிக்க சென்ற குழுவினரையும் குறித்த யானை துரத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

அதனையடுத்து, வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் வைத்தியர்களும் இணைந்து யானைக்கு சிகிச்சை அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]