காட்டுப்பகுதி கஞ்சா செய்கை தீயிட்டு அழிப்பு

காட்டுப்பகுதியில் முன்னெடுக்கப்பட்டு வந்த கஞ்சா செய்கை, பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் அழிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் புத்தள முகாமின் அதிகாரிகள் அம்பேகமுவ, கல்கொட்டுகந்த பகுதியில் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டுள்ளனர்.

ரகசிய தகவலை அடுத்து, இந்த தேடுதல் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இதன்போது, காட்டின் இரண்டு பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட கஞ்சா செய்கை கண்டுபிடிக்கப்பட்டு தீவைத்து அழிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் யாரும் கைதுசெய்யப்படவில்லை என்று விசேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]