காடழிப்பில் ஈடுபட்ட ரிஷாட்டுக்கு எதிரான வழக்கு ஜுன் 28 விசாரணை

பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ள காணிகளை மீண்டும் அரசாங்கம் கையகப்படுத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் ஜூன் மாதம் 28ம் திகதி விசாரிப்பதற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு உள்ளிட்ட இரண்டு பேரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

குறித்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி அர்ஜுன ஒபேசேகர முன்னிலையில் விசாரணைக்கு வந்த போது இந்த உத்தரவை பிறப்பிக்கப்பட்டது.

இந்த மனுவின் நான்காவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்த பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை தொடர்ந்து அழித்து கொண்டிருப்பதாக மனுதாரர் சார்பில் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.

இதன்காரணமாக மனுவை விரைவாக விசாரணைக்கு எடுக்குமாறு மனுதாரர் சார்பில் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பாதுகாக்கப்பட்ட வில்பத்து வனத்தை அழித்து சட்ட விரோத கட்டடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதால் சூழலுக்கு பாரியளவு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இது முற்றாக சட்டத்திற்கு மாறானது என்றும் தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அகற்றி அந்தக் காணிகளை அரசாங்கம் மீண்டும் கையகப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிடுமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்திடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]