காஜா புயலால் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

இந்தியா தமிழகத்தில் காஜா புயலால் பலியானவர்களின் எண்ணிக்கை 49 ஆக அதிகரித்துள்ளது.

நேற்று முந்தினம் இரவு வீசிய கஜா புயலால் நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, ஜெகதாப்பட்டினம்,தஞ்சை, திருவாரூர் திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக 18 பேர் உயிரிழந்துள்ளனர்.

புதுக்கோட்டை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் தலா 7 பேரும், கடலூர் மாவட்டத்தில் 3 பேரும், திண்டுக்கல், சிவகங்கை, திருச்சி மாவட்டங்களில் தலா 2 பேரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக குறிப்ிடப்படுகிறது.

இது தவிர 1 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பல்லாயிரக்கணக்கான மரங்கள் சரிந்துள்ளதாகவும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]