காசோலை மோசடி காரணமாக கைது செய்யப்பட்ட சண் குகவர்தனை கட்சியில் இருந்து விலக்கிய மனோ

காசோலை மோசடி காரணமாக கைது செய்யப்பட்ட சண் குகவர்தனை கட்சியில் இருந்து விலக்கினார் அமைச்சர் மனோ

கட்சியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் முறையில் சமூகத்தில் நடந்துக்கொண்டமை, கட்சி ஒழுங்கு விதிகளை மீறியுள்ளமை ஆகிய காரணங்களுக்காக மேல்மாகாணசபை உறுப்பினர் சண்முகநாதன் குகவரதன், கட்சியின் அடிப்படை அங்கத்துவத்திலிருந்தும், சகல பொறுப்புகளிலிருந்தும் உடனடியாக அமுலுக்கு வரும் வண்ணம் இடை நிறுத்தப்பட்டுள்ளார். என அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூல் வாயிலாக தெரிவித்தார்.

காசோலை மோசடி

சண்முகநாதன் குகவரதன் வகித்து வந்த, கட்சியின் உபதலைவர் பதவிக்கு, கொழும்பு மாநகரசபை உறுப்பினர் சின்னத்தம்பி பாஸ்கரா நியமிக்கப்பட்டுள்ளார். இந்த இரண்டு நடவடிக்கைகளையும் அடுத்த வாரம் கூடும் கட்சியின் அரசியல் குழு பரிசீலித்து இறுதி முடிவை எடுக்கும்.என கூறியுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]