காசுக்கு விலை போகாத அரசியல்வாதிகளை வைத்து வீட்டுப் பிரச்சனைகளை நூற்றுக்கு நூறு வீதம் நிவர்த்திசெய்வேன்
காசுக்கு விலை போகாத மட்டக்களப்பு மாவட்ட அரசியல்வாதிகளை வைத்துக்கொண்டு எதிர்காலத்தில் காணப்படக்கூடிய வீட்டுப்பிரச்சனைகளை நூற்றுக்கு நூறு வீதம் நிவர்த்திசெய்து தருவேன் என வீடமைப்பு நிருமானத்துறை கலாசார அமைச்சர் சஜித் பிரமேதாஸ தெரிவித்தார்
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாமல் மக்கள் மத்தியில் ஆதரவு இல்லாமல் அரசியல்யாப்பினை புறந்தள்ளிவிடடு ஜனநாயகத்தை குப்பைக்கூடையில் போட்டுவிட்டு கள்ளவழியில் ஆட்சியைப் பிடிக்க வந்தவர்களை ஜனநாயக வழியில் நாங்கள் துரத்தியடித்துவிட்டோம் என்றும் அவர் கூறினார்
மட்டக்களப்பு கும்புறுமூலையில் செமட்ட செவன வீடமைப்புத்திட்டத்தில் பழமுத்திர்சோலை கிராமத்தை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (06) நடைபெற்றது.
மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், ஞா.சிறிநேசன், வீடமைப்பு அதிகாரசபை மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அவர் தொடரந்து உரையாற்றுகையில் –
கடந்த காலங்களில் இந்த நாட்டை சூரையாடியவர்கள் ஒரு குறுகிய காலத்திற்குள் கள்ள வழியில் பிரதமர் பதவியைக் கைப்பற்றிக்கொண்டு கள்ளத்தனமான அமைச்சுக்களை உருவாக்கிவிட்டு மீண்டுமொருமுறை நாட்டை சூரையாட தயாரானார்கள் அந்த கள்ள கூட்டத்தை னைநாயக வழியில் மக்களின் செல்வாக்கு மூலம் நாங்கள் துரத்திவிட்டோம்.
நாங்கள் அரசாங்கம் கள்ளத்தனமான ஒப்பந்தங்கைளச் செய்துள்ளதாக திருட்டுத்தனமாக ஆட்சியைக் கைப்பற்ற நினைத்தவர்கள் தற்போது கூறிவருகிறார்கள். நாங்கள் எப்போதும் மக்களின் நலன் சார்ந்து ஒப்ந்தங்களைச் செய்து அவர்களின் நலன் சார்ந்து சிந்திப்பவர்கள். வீதிகளைப் புனரமைப்பது, கடற்றொழிலாளர்களுக்கு வளமான வாழ்கையை ஏற்படுத்தவும், விவசாயிகளை மேன்மையடையசெய்ய வேண்டம் என்பதற்காக மக்கள் மத்தில் சென்று ஒப்பந்தங்களை செய்துள்ளோம்.
நல்லாட்சி அரசாங்கத்தை தோற்கடிப்பதற்காக சிலர் நிதி மோசடி, பதவி மோசடி, அபிவிருத்தி மோசடி ஒப்பந்தங்களை செய்தார்கள். அவர்கள் சொந்த குடும்பங்களின் வயிறுகளை வளர்ப்பதற்காகவும் ஒப்ந்தங்களைச் செய்தார்கள் இவர்கள் நாட்டைப்பற்றி சிந்திக்வில்லை. கள்ள ஒப்பந்தங்களைச் செய்தவர்கபளை நாட்டின் மக்கள் அடையாளம் கண்டார்கள் அவர்களை மக்களின் சக்தியைப் பயன்படுத்தி ஜனநாயக ரீதியில் ஓரம்தள்ளி அவர்களின் கள் ஒப்பந்தங்களை கிளித்து குப்பையில் போட்டுவிட்டோம்.
இந்த மாவட்டத்திலுள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான யோகேஸ்வரன், சிறிநேசன், இராஜாங்க அமைச்சர்களான அலிஸாஹிர் மௌலானா, அமீர் அலி ஆகியோர் இலஞ்சங்களுக்கு துணை போகாதவர்கள் ஜனநாயகத்தின்பால் அன்பு கொண்டு உறுதியாக இருந்தார்கள் இடையில் உருவாக்கப்பட்ட கள்ளத்தனமான அரசாங்கத்துடன் இணையாதவர்கள்.
எனது தந்தை இந்த நாட்டின் வளர்சிக்காக உழைத்து உயிர்த் தியாகம் செய்தவர் அந்த வழியில் நானும் நின்று இந்த நாட்டிலுள்ள அனைவருக்கும் முழு மூச்சாகப் பணியாற்றுவேன் என்றார்.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universaltamil
Twitter – www.twitter.com/Universalthamil
Instagram – www.instagram.com/universaltamil
Contact us – [email protected]