காசல்ரீ நீர்த்தேக்கத்திலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

பெண்ணின் சடலம்

டிக்கோயா காசல்ரீ நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு அருகாமையில் இருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று காலை 8.30 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பொது மக்கள் வழங்கிய தகவலின் அடுத்தே இச்சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் கூறினர்.

கடற்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம், மரண விசாரணைகளின் பின் வைத்திய பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

காசல்ரீ பிரிதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய, ஒரு பிள்ளையின் தாய் கடந்த ஒரு வாரத்திற்கு முன் காணாமல் போயுள்ளதாக பொலிஸாரிடம் முறையிடப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]