காசல்ரீ நீர்தேகத்திலிருந்து தாயின் சடலம் மீட்பு

காசல்ரீ நீர்தேகத்திலிருந்து பெண்ணின் சடலம் ஒன்று இன்று காலை 11 மணியளவில் மீட்கப்பட்டதாக நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

ஒஸ்போன், காசல்ரீ பிரிவைச் சேர்ந்த திருமணமான இரண்டு பிள்ளைகளின் தாயான சுந்தரலிங்கம் சிவகுமாரி (29 வயது) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

காச நோயாள் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்து நீர்தேக்கத்தில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்ப விசாரணையின் பின்னர் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

ஹட்டன் நீதிவானின் மரண விசாரணைகளின் பின்னர், சடலம் வைத்திய பரிசோதனைக்காக டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]