காங்கேசன்துறையில் மனித எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

யாழ் காங்கேசன்துறை  புகையிரத தண்டவாளத்திற்கு அருகாமையில் சந்தேகத்திற்கிடமானமுறையில் மனித எலும்புக்கூடு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது
இறந்து நான்கு மாதங்களிற்குள்ளான இந்த மனித எலும்புக்கூடு காங்கேசன்துறை புகையிரத தண்டவாளத்துக்கு அருகில் இன்று காலை (12) அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த எலும்புக்கூடு ஆணுடையது என்றும் இறந்து சில மாதங்களே இருக்கலாம் எனவும் பொலிசார் சந்தேகித்துள்ளனர்.
இந்த எலும்புக்கூட்டை மல்லாகம் நீதிமன்ற பதில் நீதிவான் ஆனந்தரஜா மற்றும் யாழ் சட்ட வைத்திய அதிகாரி மயூரன் ஆகியேர் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர்
இந்த எலும்புக்கூடு தொடர்பில் உடற்கூற்று பரிசேதனைக்கு நீதவான் உத்தரவிட்டதுடன் சடலம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காங்கேசன்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]