காங்கேசன்துறையில் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது

காங்கேசன்துறையில் கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த இருவர் கைது

யாழ்.காங்கேசன்துறை கடற்பரப்பில் கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை கடற்பகுதியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த காங்கேசன்துறை கடற்படையினர் கடலில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த படகை மறித்து சோதனையில் ஈடுபட்டனர்.

இதன்போது குறித்த படகிலிருந்து 28 கிலோ கஞ்சாவை மீட்டுள்ளதோடு, படகிலிருந்த வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த இரண்டு நபர்களையும் கைது செய்துள்ளனர்.

இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட இருவரும் காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், கைப்பற்றப்பட்ட கஞ்சா போதைப்பொருளையும் கடற்படையினர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் கைது செய்யப்பட்ட நபர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதோடு, விசாரணையின் பின்னர் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]