முகப்பு News Local News காங்கேசன்துறையில் இராணுவத்தினர் வசமிருந்து காணி மக்களிடம் கையளிப்பு

காங்கேசன்துறையில் இராணுவத்தினர் வசமிருந்து காணி மக்களிடம் கையளிப்பு

யாழ் காங்கேசன்துறை பகுதியில் படையினர் வசமிருந்த மேலும் ஒரு தொகுதி நிலம் பொதுமக்கள் பாவனைக்கு இன்று கையளிக்கப்பட்டுள்ளது

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மத்தி ஜே234 கிராமசேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியே இவ்வாறு படையினரின் கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது

குறித்த பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்ககைக்கு அமைவாக அப்பகுதியில் இருந்துவந்த இராணுவமுகாம் முற்றாக அகற்றப்பட்ட நான்கரை 4.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களிடம் கையளிக்கப்பட்டது.

இன்று பிற்பகல் காங்கேசன்துறை மத்தியில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ் மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்சன ஹெட்டியராச்சியிhல் காணிக்கான சான்றிதல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகனிடம் கையளிக்கப்பட்டது

தேல்லிப்பளை பிரதேச சயலாளர் சிவசிறி உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com