‘காக்க காக்க 2’ கௌதம் மேனன் படம் ஹீரோ ரெடி

நடிக்க வந்து பதினெட்டு வருடங்கள் கழித்து ‘தடையறத் தாக்க’ என்ற படத்தில்தான் அருண் விஜய்க்கு அங்கீகாரம் கிடைத்தது. ஆனாலும் போதிய விளம்பரம் இல்லாததால் வெற்றி பெறவில்லை. பிறகு இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்த ‘என்னை அறிந்தால்’ படம் அருண் விஜய்க்கு பெரிய வெற்றியை தேடிக் கொடுத்தது. அறிவழகன் இயக்கத்தில் அவர் நடித்த ‘குற்றம் 23’ ஒரு முழுமையான கமர்ஷியல் வெற்றியை பெற்று அருன்விஜையை உற்சாகப்படுத்தியது.

Kaakha Kaakha 2

தற்போது அவர் ‘தடையறத்தாக்க’ இயக்குனர் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் ‘தடம்’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படம் முடித்துவிட்டு கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் அருண் விஜய். இது அருண் விஜய்யின் 25வது படமாகும். இது சூர்யா, ஜோதிகா நடிப்பில் கௌதம் மேனன் இயக்கி மெகா ஹிட் படமான ‘காக்க காக்க’ படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என்று பேசப்படுகிறது.