கஷ்டத்தை காட்டி கொள்ளாமல் நடித்த கேத்ரீன் தெரசா

தமிழில் ‘மெட்ராஸ்’ படம் மூலம் அறிமுகமானவர் கேத்ரீன் தெரசா. இவர் இந்த படத்தை தொடர்ந்து கடம்பன், கணிதன் ஆகிய படங்களில் நடித்திருந்தார்.

தற்போது கேத்ரீன் தெரசா சாய்சேகர் இயக்கும் படத்தில் நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக நடிக்கிறார்.

இந்த படத்தில் கேத்ரீன் தெரசாவின் நடிப்பு பற்றி இயக்குனர் சாய்சேகர் கூறுகையில், ‘இது வழக்கமான கதாநாயகி வேடம் கிடையாது. நன்றாக நடிக்க தெரிந்த கதாநாயகி தான் வேண்டும். அதனால் தான் கேத்ரீன் கொண்டு வந்தோம். மழை, வெயில் என்று எதையும் பொருட்படுத்தாமல் நடித்தார்.

ஒரு காட்சியில் வில்லன் அவரது தலைமுடியை பிடித்து தரதரவென்று இழுத்து வரவேண்டும். இன்னொரு காட்சியில் 30 கிலோ எடையுடன் 12 மணி நேரம் நடிக்க வேண்டும். எந்தவித முக சுளிப்பும் இல்லாமல் நடித்துள்ளார்.’ என்று பெருமையாக கூறியுள்ளார்.

கஷ்டத்தை காட்டி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]