கவுதம் கார்த்திக் நடிப்பில் Mr.சந்திரமௌலி

Mr.சந்திரமௌலி

திரு இயக்கத்தில், கார்த்திக், கவுதம் கார்த்திக், ரெஜினா கசண்டரா மற்றும் வரலக்ஷ்மி சரத்குமார் நடிப்பில் உருவாகிவரும் ‘Mr.சந்திரமௌலி” படத்தின் படப்பிடிப்பு மிக தெளிவாக திட்டமிடப்பட்டு, வேகமாக நடந்து வருகின்றது. இப்படத்திற்கான படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவுபெற்றதையடுத்து இதன் நினைவாக கேக் வெட்டி கொண்டாடினர் இப்படக்குழு.இப்படத்தில் ரெஜினாவின் பாடல் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து இப்படத்தின் தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில் , ” தொழில் பக்தி உள்ள ஒரு கதாநாயகி ரெஜினா. அர்பணிப்பிலும், நடிப்பிலும் அவருக்கு நிகர் அவரே. அவரது ஆற்றலும் பங்களிப்பும் இந்த படத்திற்கு பெரும் பலமாகவுள்ளது. படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு நடந்து வருகின்றது. வரும் கோடை விடுமுறை காலத்தில் ‘Mr.சந்திரமௌலி’ ரிலீஸ் ஆகும் ”இந்த படத்தை BOFTA media works India Private Limited சார்பில் ‘Creative Entertainers and Distributors’ நிறுவனம் தயாரித்துவருகிறது. இப்படத்தில் இயக்குனர் மகேந்திரன், இயக்குனர் அகத்தியன், சந்தோஷ் பிரதாப், சதிஷ், ஜகன், ‘Mime’ கோபி, விஜி சந்திரசேகர் மற்றும் மனோபாலா ஆகியோர் முக்கிய துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாம் CS இசையில், ரிச்சர்ட் M நாதன் ஒளிப்பதிவில், TS சுரேஷ் படத்தொகுப்பில், ஜாக்கி கலை இயக்கத்தில் ‘Mr.சந்திரமௌலி’ உருவாகிவருகிறது.

Mr.சந்திரமௌலி Mr.சந்திரமௌலிMr.சந்திரமௌலி Mr.சந்திரமௌலி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]