கவிஞர் வைரமுத்து வைத்தியசாலையில் அனுமதி

கவிஞர் வைரமுத்து உடல்நலக் கோளாறு காரணமாக மதுரை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.கவிஞர் வைரமுத்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பாடகி சின்மயி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள வைரமுத்து, தற்போது வீடியோ மூலம் சின்மயிக்கு பதில் கூறியிருந்தார்.

இது குறித்து வீடியோ மூலம் வைரமுத்து கூறியதாவது: ”என் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுக்கள் எல்லாம் முழுக்க முழுக்க பொய்யானவை. முற்றிலும் உள்நோக்கம் உடையவை. அவை உண்மையானவையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் என் மீது வழக்கு தொடரலாம். சந்திக்க காத்திருக்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், கவிஞர் வைரமுத்து உடல்நலக் கோளாறு காரணமாக மதுரை அப்பல்லோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை சென்றிருந்த வைரமுத்து அங்கு பசுமலையில் உள்ள விடுதியில் தங்கியிருந்த போது உணவு ஒவ்வாமை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிகிச்சைக்குப் பின் அவர் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]