கவர்ச்சி காட்ட நான் தயார் ஆகிவிட்டேன்…

‘இது என்ன மாயம்’ படத்தின் மூலமா தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவங்க நம்ம கீர்த்தி சுரேஷ். அந்த படம் அவுங்களுக்கு பெரிய பெயர் வாங்கி கொடுக்காட்டாலும் ரஜினி முருகன் திரைப்படம் மூலமா தமிழ் மக்கள் மனசுல ஒரு நல்ல இடத்தை பிடிச்சாங்க கீர்த்தி சுரேஷ்.

அதன் பிறகு அவுங்க நடிச்ச ரெமோ படமும் ஒரு ஹிட் படமா அமைஞ்சுது. இருந்தாலும் தொடரி, பைரவா, பாம்பு சட்டை இப்படி தொடர்ந்து தோல்வி படங்களா அமைஞ்சதால அவுங்க கோலிவுட்டை விட்டு டோலிவுட் எனப்படும் தெலுங்கு திரையுலகத்துல அதிக கவனம் செலுத்த ஆரம்பிச்சுட்டாங்க.

தெலுங்குல அவுங்க நடிச்ச நேனு சைலஜா திரைப்படம் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதன் பிறகு அவுங்க நடிச்ச நேனு லோக்கல் படமும் நல்லாவே ஓடுனுச்சுங்க.

இருந்தாலும் இப்போ தெலுங்குல முக்கியமா ரகுல் பரீத் சிங், காஜல், சமந்தானு நடிப்போடு கவர்ச்சியையும் சேர்த்து கொடுக்குற நடிகைகள் பல பேரு இருக்குறதால இவுங்க கைவசம் இப்போ தமிழ்ல ஒரு படமும், தெலுங்குல ஒரு படமும் மட்டும்தாங்க இருக்கு.

தன்னுடைய தெலுங்கு மார்கெட்டை தக்கவைப்பதற்காக இனி மடை திறந்த வெள்ளமாய் கவர்ச்சி காட்டப்போறதா முடிவெடுத்துருக்காங்கலாம்.

இந்த விருந்து தெலுங்கு ரசிகர்களுக்கு மட்டும்தாங்க. தமிழ்ல வழக்கம் போல அடக்கமான பொண்ணாவே வருவாங்களாம்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: கீர்த்தியோட அம்மா யாருன்னு தெரியுமா? நெற்றிக்கண் படத்துல சின்ன ரஜினிக்கு ஜோடியா ராமனின் மோகனம் பாட்ல வருவாங்களே மேனகா அவுங்களேதான்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]