கவர்ச்சி உடையில் அமலாபால் – கிண்டல் செய்த ரசிகர்கள் புகைப்படம் உள்ளே

சமீபத்தில் அந்திராவில் பிலிம் பேர் சௌத் விழா வெகு விமர்சியாக கொண்டாடபட்டது. இந்த விழாவில் தெலுங்கு, தமிழ் உள்ளிட திரைப்பட கலைஞர்கள் பங்கு பெற்றனர். மேலும் இதில் பல நடிகைகள் கவர்ச்சியான ஆடைகளை அணிந்து வந்திருந்தனர். ஆனால், அமலா பால் தானே வடிவமைத்த ஆடையில் சென்ருள்ளார். தற்போது அந்த ஆடையில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை ட்விட்டர் வாசிகள் கிண்டலடித்து வருகின்றனர்.

தமிழில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘சிந்து சமவெளி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை அமலா பால் .அதன் பின்னர் தமிழ், தெலுகு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது விஷ்ணு விஷால் நடித்து வரும் ‘ராட்சசன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் போஸ்டர்கள் கூட கடந்த மே மாதம் வெளியானது. இயக்குனர் ஏ எல் விஜய் இயக்கிய ‘தெய்வ திருமகள், தலைவா’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அமலா பாலுக்கும், ஏ எல் விஜய்க்கும் காதல் மலர்ந்தது. 2014 ஆம் நடைபெற்ற இவர்களது திருமணம் மூன்றே ஆண்டுகளில் விவகாரத்தில் முடிந்தது.

விவகரத்திற்கு பின்னரும் படங்களில் நடித்து வரும் அமலா பால் மிகவும் சுதந்திரமாக தான் சுற்றி வருகிறார். தற்போது விளம்பரங்கள், படங்கள் என்று பிஸியாக இருந்து வரும் அமலா பால் அவ்வப்போது தனது சமூக வலைத்தளங்களுக்கும் நேரம் ஒதுக்குகிறார். மேலும் தனது சமீப கால நடவடிக்கைகளையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

சமீபத்தில் நடந்த விழா ஒன்றிற்கு செல்வதற்காக ஒரு பிரத்யேகமான ஆடை ஒன்றை தானே வடிவமைதுள்ளார். அடர் சிகப்பு நிறத்தில் இருக்கும் அந்த ஆடைக்கு இணையாக முகத்தில் அதிக மேக் அப் போட்டுக் கொண்டு, உதட்டில் சிவப்பு நிற லிப்லஸ்டிகையும் அப்பிக்கொண்டு சென்றுள்ளார். அத்தோடு, அதே கெட் அப்பில் ஒரு புகைப்படம் ஒன்றை எடுத்து அதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமலா பாலின் ஆடையையும், மேக் அப்பையும் ரசிகர்கள் ‘ என்ன நிபான் பெ யிண்ட்டா, இது என்ன டிசைன் நல்லவே இல்லை’ என்றெல்லாம் கிண்டல் அடித்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]