கழுத்தில் சுருக்கிட்டுத் தொங்கி பெண்ணொருவர் பலி

பெண்ணொருவர் பலி

கழுத்தில் சுருக்கிட்டுத் தொங்கி பெண்ணொருவர் பலி

கழுத்தில் சுருக்கிட்டுத் தொங்கிய பெண்னொருவர் உயிரிழந்ததையடுத்து, அவரது கணவர் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த சம்பவமொன்று சனிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு- வந்தாறுமூலையை விஸ்னுகோயில் வீதியைச்சேர்ந்த சேர்ந்த 24 வயதுடைய அழகரெத்தினம் டிசாந்தினி என்பவரே உயிரிழந்தவரென ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பிரதேச திடீர் மரண விசாரணையதிகாரி எம்எஸ்எம். நஸீர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு மரண விசாரணைகளை ஆரம்பித்தார். இதையடுத்து இப்பெண்ணின் சடலம் சட்டவைத்திய அதிகாரியின் உடற்கூறு பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் பற்றித் தெரிவிக்கப்படுவதாவது– கணவன் கிரமமாக தொழிலுக்குச் செல்லாததனால் வீட்டில் அடிக்கடி வாய்த்தர்க்கம் ஏற்படுவதுண்டு. இந்நிலையில் கணவனை மத்திய கிழக்கு நாட்டிற்கு தொழிலுக்காக அனுப்புவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சியினால் மனைவி பாரிய கடன் சுமையுடன் காணப்பட்டுள்ளார்.

எனினும் மனைவி கூலித்தொழிலிற்குச் செல்வதற்கும் அனுமதிக்காததன் காரணமாக கடும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதையடுத்து கழுத்தில் தூக்கிட்டுக்கொண்டதாகவும் வைத்திய சாலைக்கு கொண்டுசெல்லமுட்பட்ட வேளையில் மரணித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதன்பின்னர் கணவர் ஏறாவூர்ப் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்;.

ஆயினும் குடும்ப உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்த சந்தேகத்தினையடுத்து சடலம் சட்ட வைத்தியதிகாரியினால் பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளது.

ஏறாவூர்ப் பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

பெண்ணொருவர் பலி பெண்ணொருவர் பலி பெண்ணொருவர் பலி

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]