கழுத்தறுப்பு சர்சையில் சிக்கிய பிரிகேடியரை நாட்டுக்கு அழைத்துவர நடவடிகை

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக பணியாற்றி வந்த இலங்கை பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவை இலங்கைக்கு அழைத்துவரவுள்ளதாக இராணுவப்பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தப்பத்து தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைக் கூறினார்.

“இலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தன்று பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களுக்கு சமிக்ஞை காட்டியமை தொடர்பான சர்ச்சையுடன் சம்பந்தப்பட்ட பிரிகேடியர் பிரியங்க மீண்டும் நாட்டுக்கு அழைத்துவரப்படவுள்ளாரா?” என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

“புலம்பெயர் அமைப்பின் கோரிக்கைக்கு அமைவாக இவர் அழைத்துவரப்படவில்லை. மீண்டும் மீண்டும் இச்சம்பவம் தொடர்பில் ஏற்பட்ட விடயம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான பிரச்சனைகள் காரணமாக இவர் அழைத்துவரப்படவுள்ளார். இது இராஜதந்திர ரீதியில் இடம்பெறும் வழமையான நடைமுறையாகும்” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]