முகப்பு Cinema ‘கழுகு-2’ திரைப்படத்தின் புதிய தகவல்கள் !

‘கழுகு-2’ திரைப்படத்தின் புதிய தகவல்கள் !

நடிகர் கிருஷ்ணா – பிந்து மாதவி நடிப்பில் உருவாகி வெளிவந்த கழுகு படத்தின் பாகம் 2 தொடர்பில் புதிய தகவல் வெளியாகி வெளியாகியுள்ளன.

இதன்படி சத்யசிவா இயக்கத்தில் கிருஷ்ணா – பிந்து மாதவி, தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான கழுகு படத்திற்கு ரசிகர்கள் மத்தில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில், அதன் இரண்டாவது பாகம் கழுகு-2 என்ற பெயரில் தற்போது உருவாகி வருகிறது.

கிருஷ்ணா நாயகனாகவும், பிந்து மாதவி நாயகியாகவும் நடிக்கும் இத்திரைப்படத்தில், காளி வெங்கட் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பதோடு, கோபி கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ராஜா பட்டாசார்ஜி படத்தொகுப்பு செய்யவுள்ளார்.

மூணாறில் படமாக்கப்பட்ட இந்தப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் முடிந்த நிலையில், நேற்று முதல் படத்தின் டப்பிங் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com