கழிவறை குழிக்குள் விழுந்து இரண்டு பேர் உயிரிழப்பு

அரநாயக்க பிரதேசத்தில் கழிவறை குழிக்குள் விழுந்து இரண்டு பேர் இன்று காலை உயிரிழந்துள்ளனர்.

அரநாயக்க பிரதேசத்தைச் சேர்ந்த 70 மற்றும் 34 வயதுடைய இரண்டு பேரே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தமது வீட்டுக்கு அருகில் இருந்த கழிவறை குழிக்குள் ஒருவர் விழுந்துள்ளதையடுத்து அவரை காப்பாற்றச் சென்ற மற்றைய நபரும் குழிக்குள் விழுந்து உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் அரநாயக்க வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. அரநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]