கள்ள காதல் பற்றி கணவரிடம் சொன்னதால் மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்தேன் – தாயின் அதிர்ச்சி வாக்கு மூலம்

தாயின் கள்ளகாதல் பற்றி தந்தையிடம் கூறியதால் மகளை கிணற்றில் தள்ளி  கொலை செய்த சம்பவம் தமிழ்நாடு-சேலம் பகுதியில் நடந்துள்ளது.

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள இலுப்பநத்தத்தில் தாயே குழந்தையை கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டு, கொள்ளை கும்பல் தன் நகைகளை பறித்ததோடு, தன்னையும், தன் 5 வயது மகள் ஷிவாணியையும் கிணற்றில் தள்ளிவிட்டு சென்றுவிட்டனர் என பிரியங்கா காந்தி என்கிற பெண் நாடகமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பொலிஸ் விசாரணையில் பிரியங்கா காந்தி, “சேலம் கொண்டப்பா நாயக்கன்பட்டியை சேர்ந்த கார் டிரைவர் வெங்கடேஷ்(25) என்பவரோடு எனக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. எனவே, அடிக்கடி இருவரும் உல்லாசம் அனுபவித்து வந்தோம். கடந்த 24ம் திகதி மகளுடன் வெங்கடேஷின் வீட்டிற்கு சென்று அவருடன் 3 மணி நேரம் இருந்தேன்.

அப்போது என் கணவர் சிங்கப்பூரில் இருந்து போன் செய்தார். அவரிடம் பேசிய என் மகள் நாங்கள் வெங்கடேஷ் வீட்டில் இருப்பதை கூறிவிட்டாள். எங்களின் கள்ளக்காதல் விவகாரத்தையும் கூறிவிட்டாள்.

விரைவில் என் கணவர் ஊருக்கு வர இருப்பதால் அவரிடம் எல்லாவற்றையும் கூறிவிடுவாள் என நான் பயந்தேன். எனவே, இரவு கிணற்றில் தள்ளி கொலை செய்தேன்.

இரவு முழுவதும் அங்கே இருந்தேன். அதிகாலை கிணற்றில் இறங்கி ‘என்னை காப்பாற்றுங்கள்’ என சத்தமிட்டேன். அதன் பின் பொலிஸாரும், தீயணைப்பு படை வீரர்களும் என்னை மீட்டனர்.

கொள்ளையர்கள் தள்ளிவிட்டதாக நாடகம் ஆடினேன் என வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]