கள்ளக் காதலனால் பெண்ணுக்கு நேர்ந்த கதி

ஊவா பரணகமை திம்புலன பகுதியில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலமொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.

ஊவா பரணகமை திம்புலன பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய தீபிகா பிரியதர்சினி என்ற 3 பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கள்ளக் காதலனால்

குறித்த பெண்ணின் கணவர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் கடந்த சனிக்கிழமை இரவு வீட்டிற்குவந்த பெண்ணின் கள்ளக் காதலன் குறித்த பெண்னை கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளதுடன் கணவர் வருகை தருவதை கண்டு ஓடியுள்ளதாக பொலிஸாரிடம் கணவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சம்பவம் இடம்பெரும் போது குறித்த பெண் வீட்டில் தனியாக இருந்துள்ளதுடன், பிள்ளைகள் பாட்டி வீட்டிற்குச் சென்றிருந்துள்ளனர்.

குளறுபடியான சம்பவத்தை தீர்ப்பதற்கென பதுளை மாவட்ட பொலிஸ் மோப்ப நாயின் உதவியுடன் தமது விசாரணையை முன்னெடுத்தனர். இதன் பயனாக சுமார் 1.5 கிலோ மீற்றர்கள் தூரம் சென்ற மோப்ப நாய், 37 வயதுடைய சந்தேக நபரின் வீட்டை இனங்கண்டுள்ளது.

கள்ளக் காதலனால்

எனினும் சந்தேக நபரும் அவரது மனைவியும் பிரதேசத்தை விட்டு தப்பி ஓடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, குறித்த சந்தேகநபரின் வீட்டின் முன் சுவற்றில் இரத்தம் படிந்திருந்தமையும் அவதானிக்க முடிந்தது. மரண விசாரணைகள் வெலிமடை நீதவான் முன்னிலையில் நடைபெற்றது.சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை ஊவா பரணகம பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]