கள்ளக்காதல் மோகத்தால் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட கணவன்!

தமிழகம்- கிருஷ்ணகிரி மாவட்டத்தின் தொட்டபேளூரை சேர்ந்தவர்கள்  மாதேஷ் (35)- அம்பிகா (28) தம்பதிகள். இவர்களுக்கு  இரு மகள்கள்  உள்ளனர்.

அம்பிகாவுக்கும் அதே ஊரைச் சேர்ந்த உறவினர் ராமமூர்த்தி (34) என்பவருக்கும், கடந்த இரண்டு ஆண்டுகளாக கள்ளத்தொடர்பில்  இருந்து வந்துள்ளனர். இதனை மாதேஷ் கண்டித்துள்ளார்.

இந்நிலையில், கடந்த, இரண்டு மாதங்களாக, பெங்களூருவில் உள்ள ரெடிமேட் ஆடைகள் தயாரிக்கும் நிறுவனத்துக்கு அம்பிகா வேலை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் வேலை முடிந்து அம்பிகா வீடு திரும்பிய போது கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்துள்ளார்.

இந்த கொலை தொடர்பில் கெலமங்கலம் பொலிசார் விசாரணை செய்த போது, கள்ளக்காதலுக்கு  இடையூறாக இருந்ததால் கணவரை கொலை செய்யும் படி அம்பிகா ராமமூர்த்தியை வலியுறுத்தியுள்ளார். இதையடுத்து நண்பர் முரளி (32) உதவியுடன் மாதேஷை ராமமூர்த்தில் கொலை செய்தது தெரியவந்தது.

தற்போது அம்பிகா உட்பட மூவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]