கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த குழந்தைக்கு சூடு வைத்து கொடுமைபடுத்திய தாய்

திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த மகாலட்சுமி என்பவர் தனது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த தனது குழந்தைக்கு சூடு வைத்து கொடுமைபடுத்தியுள்ளார்.

திருமணத்திற்கு பிறகு தனது கணவர் செல்வனுடன் பெங்களூருவில் வசித்து வந்துள்ளார் மகாலட்சுமி.

இந்த நிலையில் திருவிழாவுக்காக சொந்த ஊருக்கு வந்த மகாலட்சுமி, தனது குழந்தையுடன் திருமணத்திற்கு முன்பு காதலித்த கதிரவன் என்பவருடன் தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு பின் ஊருக்கு திரும்பி வந்த மகாலட்சுமியிடம் பொலிசார் நடத்திய விசாரணையில் கதிரவனுடன் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அறை எடுத்து தங்கி உல்லாசமாக இருந்தது தெரியவந்தது.

மேலும் உல்லாசமாக இருப்பதற்கு இடையூறாக இருந்த தனது இரண்டரை வயது பெண் குழந்தைக்கு சூடு வைத்து கொடுமை படுத்தி இருந்ததும் தெரிய வந்தது.

மகாலட்சுமி மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி தனது மகள் என்று பாராமல் கொடுமைப்படுத்திய மகாலட்சுமியை 15 நாட்கள் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]