கள்ளக்காதலால் மருமகனுக்கு எமனான மாமியார்!!

அனுராதபுரம் சுவாஷ்திபுர பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவம் ஒன்றுடன் தொடர்புடையதாக தெரிவித்து சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் வௌியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 28ம் திகதி 31 வயதுடைய மாலா ப்ரியந்தி எனும் 5 மாத குழந்தையின் தாயை அவரது கணவர் கொலை செய்ததாக தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து கணவரான சுசந்த குமார பாலசூரியவும் பாரிய கிணற்றொன்றில் பாய்ந்து தற்கொலை செய்துக்கொண்டார் என மாலா ப்ரியந்தியின் தாயாரினால் காவற்துறையினருக்கு வாக்குமூலம் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் , சுசந்த குமார பாலசூரியவின் சடலத்தினை உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்திய அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் சட்ட வைத்திய நிபுணர் எஸ்.எம்.எச்.எம்.கே சேனாநாயக்க, பாலசூரிய என்பவர் தற்கொலை செய்துக்கொள்ளவில்லை எனவும் , கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் எனவும் அறிவித்தார்.

இதனை தொடர்ந்து குறித்த பெண்ணின் தாயாரும் , அவருடன் தகாத உறவினை பேணி வந்தார் என தெரிவிக்கப்படும் நபரொருவரும் நேற்று மாலை கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களை இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த காவற்துறையினர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

Website – www.universaltamil.com