கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்த மனைவியை வெட்டிக்கொன்ற கணவன்

மனைவி கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்ததைக் கண்ட கணவன், மனைவியையும் கள்ளக்காதலனையும் கொன்ற சம்பவம் தூத்துக்குடியில் இடம்பெற்றுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் ஹரி கிருஷ்ணன் என்பவரின் மனைவி தங்கமாரியம்மாள்.

தங்கமாரியம்மாளுக்கு வேணுகோபால் என்பவருடன் தகாத உறவு இருந்துள்ளது.

ஹரி வேறு வேலை நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்வார். இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அவரது மனைவி தங்கமாரியம்மாள், கள்ளக்காதலனோடு உல்லாசமாக இருந்துள்ளார்.

இதனைப்பற்றி கேள்விபட்ட ஹரி தனது மனைவியையும், வேணுகோபாலையும் கண்டித்துள்ளார். இருப்பினும் அவர்களது உல்லாசம் தொடர்ந்துள்ளது.

இந்நிலையில் தன் மனைவி வேணுகோபாலும் காட்டுப் பகுதியில் உல்லாசமாக இருந்ததைப் பார்த்த கணவன் ஆத்திரத்தில் தனது மனைவி தங்கமாரியம்மாளையும், அவரது கள்ளக்காதலனையும் வெட்டிக் கொன்றுள்ளார்.

இதனையடுத்து ஹரி கோவில்பட்டி காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]